Facebook Twitter RSS

Tuesday, October 08, 2013

டாலரை காக்கும் செளதி அரேபியா!!!

அமெரிக்க மிரட்டலை நிராகரித்து ஈரானிடம் இருந்து இன்னும் அதிகமாக கச்சா எண்ணெய் வாங்கினால் இந்தியாவுக்கு ரூ. 57,000 கோடி மிச்சமாகும் என்று நேற்று கூறியிருந்தேன்.ஆனால்அதைச் செய்வது சாத்தியமா?கச்சா எண்ணெய் வர்த்தகம் என்பது உலகளவில் டாலரில் மட்டுமே நடக்கும் ஒரு வியாபாரம். கச்சா எண்ணெய்யை வளைகுடா நாடுகளே மிக அதிக அளவில் உற்பத்தி செய்தாலும் கூட அதன் விலையை நிர்ணயிப்பது லண்டன் பங்குச் சந்தை தான். இங்கு தான் சர்வதேச அளவிலான காரணிகளை வைத்து கச்சா எண்ணெய்க்கான விலை நிர்ணயிக்கப்படுகிறது. உலகில் பல்வேறு நாடுகள் தங்களுக்கு இடையிலான ஏற்றுமதிஇறக்குமதிக்கு டாலரையே பொது கரன்சியாக பயன்படுத்தி வருகின்றன.
இப்போது ஒரு பிளாஷ்பேக்...

Wednesday, October 02, 2013

கிலாபத்தின் வீழ்ச்சியே மனிதகுலத்தின் சாபக்கேடு!

முஸ்லிம் உலகின் பாதுகாப்பு அரணாக விளங்கிய கிலாபா (இஸ்லாமிய அரசு) 1924ம் ஆண்டு மார்ச் மாதம் 3ம் திகதியில் (28 ரஜப் மாதம் ஹிஜ்ரி 1342) முஸ்தபா கமால் அதாதுர்க்கினால் துருக்கிய தலைநகரான ஸ்தான்புலில் நிர்மூலமாக்கப்படடு 2008ம் ஆண்டுடன் 84 வருடங்கள் கடந்துவிட்டன. கிலாபத்தை அழித்ததன் மூலம் காலனித்துவ பிரித்தானியாவும், முஸ்லிம் உலகிலே அவர்களின் கைம்பாவையாக தொழிற்பட்ட ஆட்சியாளர்களும் முஸ்லிம் உம்மத்திற்கு பாரியதொரு அதிர்ச்சியினையும், கேவலத்தினையும் ஏற்படுத்தினார்கள். இருபதாம் நு}ற்றாண்டு முழுவதும் முழு உலகும், முஸ்லிம் உம்மத்தும் ஒட்டுமொத்த அழிவை நோக்கி பயணிக்க வேண்டி ஏற்பட்டது. முஸ்லிம் உம்மா பொருளாதார பலமற்ற, சர்வதேச பொருளாதார நிதியத்தினதும் (IMF), உலக வங்கியினதும் கால்களில் மண்டியிடும் சிற்சிறு தேசிய அரசுகளாக கூறுபோட்டு பிரிக்கப்பட்டது. முஸ்லிம் உம்மத் இராணுவ அரசுகளையும், சர்வாதிகார ஆட்சியாளர்களையும், ஜனநாயக கொடுங்கோலர்களையும், மிகவும் பின்தங்கிய அரசியல், பொருளாதார, தொழிற்நுட்ப கட்டமைப்பையும் கொண்ட சேதமுற்ற தேசமாக மாறிவிட்டது.
Blogger Wordpress Gadgets