Facebook Twitter RSS

Sunday, May 27, 2012

புகைப்பழக்கமே இல்லாத நாடாக மாறப் போகும் நியூசிலாந்து


புகைப்பழக்கத்தால் புற்றுநோய், காசநோய் ஏற்பட்டு உலகம் முழுவதிலும் ஏராளமான பேர் மரணமடைகின்றனர், இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் பல நாடுகள் தீவிரமாக இறங்கி உள்ளன.
கல்லூரி வளாகங்கள், பூங்கா, பேருந்து மற்றும் ரெயில் நிலையம் போன்ற பொது இடங்களில் புகை பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.

350 ஆண்டுகளாக முடியாத நியூட்டனின் புதிருக்கு தீர்வு: இந்திய மாணவன் சாதனை!

கடந்த 350 ஆண்டுகளாக தீர்வு காண முடியாமல் இருந்த எண் கணிதத்திற்கு, இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த மாணவன் தீர்வு கண்டறிந்து சாதனை படைத்துள்ளான்
இங்கிலாந்தின் டிரெஸ்டென் பகுதியில் வசிக்கும் சௌர்யா ரேய் என்ற அந்த மாணவன், விஞ்ஞானி சர் ஐசக் நியூட்டன் வகுத்த எண் கணிதத்திற்கு,தீர்வு கண்டுபிடித்துள்ளதாக

பெண் நபி ஏன் இல்லை?



கேள்வி :

ஏராளமான நபிமார்களை (ஆண்களை மட்டும்) தேர்ந்தெடுத்து இவ்வுலகத்திற்கு இறைவன் அனுப்பியுள்ளான் என்கிறது உங்கள் மதம். அப்படியென்றால் நபியாக ஒரு பெண்ணைக் கூட தேர்ந்தெடுக்கவில்லையே ஏன்? அல்லது ஒரு பெண் நபியாக வருவதில் உங்கள் இறைவனுக்கே உடன்பாடில்லையா? இப்படியிருக்கும் பட்சத்தில் பெண்களுக்கு உங்கள் மதத்தில் தான் சம உரிமை இருக்கிறது என்கிறீர்கள். ஏன் இந்த முரண்பாடு? என்று வாதிடுகிறார் மாற்று மத நண்பர்.

Saturday, May 26, 2012

இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள்! - 1 வரலாறு - இந்திய வரலாறு


ஏகாதிபத்திய வெள்ளையர்களின் கீழ் அடிமைப்பட்டு கிடந்த இந்தியா, சுதந்திரக்காற்றைச் சுவாசித்து 61 வருடங்கள் கடந்து விட்டன. இன்று இந்தியர்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு 61 -வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகின்ற இவ்வேளையில், இந்தியச் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட அந்தத் தியாகிகளின் ஈடு இணையற்றச் செயல்பாடுகளை நினைவு கூர வேண்டியது அவசியமாகும்.
அனைத்துப் பிரச்சனைகளையும் எதிர்கொண்டு இறுதியில் வெள்ளையனை நாட்டை விட்டு விரட்டி, 15 ஆகஸ்ட் 1947 அன்று இன்பமான சுதந்திரக்காற்றைச் சுவாசித்தனர் மக்கள். வெள்ளையன் நாட்டை விட்டு வெளியேறிய நிமிடத்திலிருந்து அதுவரை மறைமுகமாக இருந்து சதிராடிய மற்றோர் எதிரியை.. இல்லை... துரோகியைச் சமாளிக்க வேண்டிய நிலைக்கு இக்கட்டான நிலைக்கு நாடு வந்து விட்டது. ஆனால் உள்ளுக்குள்ளே வளர்ந்து வந்த அந்த எதிரியைக் குறித்தத் தெளிவான சிந்தனை இன்மையோ என்னமோ நாடு அந்தத் துரோகிகளைச் சரியாகக் கவனிக்கத்தவறி விட்டது. அதன் விளைவை நாடு சுதந்திரம் அடைந்த ஒரு வருடத்திலேயே பெற ஆரம்பித்து விட்டது.

தோழர்கள் - 3 - நுஐம் பின் மஸ்ஊத் அல் அஷ்ஜஈ (نُعَيْمِ بْنِ مَسْعُودٍ الْأَشْجَعِيِّ) வரலாறு -



நுஐம் பின் மஸ்ஊத் அல் அஷ்ஜஈ (نُعَيْمِ بْنِ مَسْعُودٍ الْأَشْجَعِيِّ)

அது ஹிஜ்ரி 5ஆம் ஆண்டு, ஷவ்வால் மாதம். 10,000 போர் வீரர்களுடன் மக்கத்துப் படையினர் மதீனாவை முற்றுகை இடுவதற்காக வந்திருந்தனர். நடுவில் புதிதாய் வெட்டப்பட்ட அகழியொன்று அவர்களை மேற்கொண்டு முன்னேற விடாமல் தடுத்துக் கிடந்தது. முஸ்லிம்களுக்குக் கடுமையான சோதனை நேரம் அது. போர்மேகம் சூழ்ந்து 27 நாட்கள் ஆகியிருந்தன.
அன்று இரவு முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார்கள்: "யா அல்லாஹ்!, நீ வாக்குறுதி அளித்தாயே வெற்றி, அதை வழங்கும்படி மன்றாடிக் கேட்கிறேன்".

அந்த நள்ளிரவில் முற்றுகை இட்டிருந்த மக்கத்துப் படைப்பிரிவிலிருந்து ஒருவர் அவசரமாய் நழுவி முஸ்லிம்களின் கூடாரத்தின் பக்கம்வர, அவரை நபியவர்கள் பார்த்து விட்டார்கள். அடையாளம் தெரிந்துவிட ஆச்சரியத்துடன், "நுஐம் பின் மஸ்ஊத்!"

"ஆமாம், நான்தான் அல்லாஹ்வின் தூதரே!" என்றார் நுஐம்.

லெனினை விஷம் வைத்து கொன்றாரா ஸ்டாலின்?




ரஷ்ய கம்யூனிஸ்ட் தலைவர் விளாடிமிர் லெனினை, அவரின் தோழர் ஜோசப் ஸ்டாலின் விஷம் கொடுத்து கொன்றிருக்கலாம் என, சரித்திர வல்லுனர் தெரிவித்துள்ளார்.பத்திரிகை செய்தி இப்படி தெரிவிக்கிறது.
ரஷ்ய புரட்சியாளர் லெனின், அதிபரான பின் தனக்கு பின் நாட்டையும், கட்சியையும் வழி நடத்தி செல்ல தகுதியானவர் ஸ்டாலின் என, முதலில் கருதினார். ஆனால், ஸ்டாலினின் சர்வாதிகார போக்கால், அதிருப்தியடைந்த லெனின், லியோன் ட்ராட்ஸ்கியை கட்சியின் பொது செயலராக அறிவிக்க நினைத்தார். "இதை தெரிந்து கொண்ட ஸ்டாலின், லெனினை விஷம் வைத்து கொன்றுள்ளதாக, நான் கருதுகிறேன்' என, ரஷ்ய வரலாற்று வல்லுனர் லெவ் லூரி என்பவர், தனது ஆராய்ச்சி கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

Friday, May 11, 2012

வக்புகளை கட்டாயமாக பதிவு செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் MLA கோரிக்கை


தமிழ்நாடு வக்ப் வாரியத்திற்கு இந்த அரசு ஒரு கோடி ரூபாய் மானியம் வழங்கியதற்காக என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் அவர்கள், புதிய வக்ப் வாரியம் விரைவிலே அமைக்கப்படும் என்று அறிவித்திருக்கின்றார்கள். புதிய வக்ப் வாரியம், அதனுடைய தலைவர், உறுப்பினர்கள் உடனடியாக நியமிக்கப்படுவது மிக அவசியமாக இருக்கின்றது.

சீனாவை சமரச பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் இந்தியா



சீனாவின் தென்கடல் பகுதி விவகாரத்தில் மேலும் பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க பேச்சு வார்த்தையுடன் முடித்துக் கொள்வோமென சீனாவிற்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.
வியட்நாமுடன் ஏற்பட்ட ஒப்பந்தம் காரணமாக சீனாவின் தென்கடல் பகுதியில் இந்தியா கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது.

வரிக்கு மேல் வரி போட்டு மக்களை கசக்கி பிழிகிறார் ,கருணாநிதி


வரிக்கு மேல் வரி போட்டு மக்களை கசக்கி பிழிகிறார் முதல்வர் ஜெயலலிதா என்று தி.மு.க தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருணாநிதி கூறியதாவது, புதுக்கோட்டை இடைத்தேர்தல் நன்னடத்தை விதிகள் தற்போது தளர்த்தப்பட்டுள்ளன. வழக்கமாக இடைத்தேர்தலில் சம்பந்தப்பட்ட தொகுதி அமைந்துள்ள மாவட்டம் முழுவதும் தேர்தல் நன்னடத்தை விதி அமலில் இருக்கும்.

பாசிச ஜெ. பரிதாப கருணாநிதி வைகோ

''
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து மே 13-ம் தேதியுடன் ஓர் ஆண்டு நிறைவடைகிறது. இந்த ஓர் ஆண்டு காலத்தை எப்படி மதிப்பிடுவீர்கள்?''
''மாற்றம் விரும்பிய மக்களுக்கு ஏமாற்றத்தையே ஜெயலலிதா தந்து இருக்கிறார் என்று, அவர் ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றாவது மாதமே சொன்னேன். 'ஜெயலலிதா திருந்திவிட்டார்’ என்று சொல்லி வாக்குக் கேட்டவர்கள் அத்தனை பேர் முகத்திலும் கரியைப் பூசிவிட்டார் ஜெயலலிதா.பால் விலையை ஏற்றிவிட்டார். பஸ் கட்டணத்தை உயர்த்திவிட்டார். மின்சாரம் கொடுக்கத் திட்டமிடாமல் மின் கட்டணத்தை மட்டும் எகிறவைத்துவிட்டார்.

Tuesday, May 08, 2012

அணுகுண்டை விட மோசமானது பிளாஸ்டிக் பைகள்: உச்ச நீதிமன்றம்


அணுகுண்டை விட மோசமானது பிளாஸ்டிக் பைகள் என்று கருத்து  தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம்,இதனை ஒழிக்க மத்திய ,மாநில அரசின்  நடவடிக்கைகள் எந்த அளவிற்கு உள்ளது என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியது.

ஹஜ் பயணிகளுக்கான மானியத்தை 10 ஆண்டுகளுக்குள் முற்றிலும் ரத்துச்செய்ய வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு

Supreme Court strikes down Centre's policy of subsidies to Haj
புதுடெல்லி:ஹஜ் பயணிகளுக்கு வழங்கப்படும் அரசு மானியத்தை,10 ஆண்டுகளுக்குள்  முற்றிலும் ரத்து செய்திட வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.
இஸ்லாமியர்கள் தங்களது வாழ் நாளில் ஒரு முறையாவது ஹஜ் புனித பயணம்  மேற்கொள்ள வேண்டும் என்பது அவர்களது மார்க்க கடமைகளில் ஒன்றாகும்.

மதுரை சைக்கிள் குண்டுவெடிப்பு: காவல்துறையின் ஒருதலைப்பட்ச விசாரணை – முஸ்லிம் அமைப்புகள் ஆட்சியரிடம் மனு!

மதுரை சைக்கிள் குண்டு
மதுரை:கடந்த வாரம் மதுரையில் சைக்கிள் குண்டு வெடித்ததையடுத்து குற்றவாளிகள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அறிந்ததும் அறியாததும்! (சிறுவர் பகுதி!) இஸ்லாம் - நபிமொழி

நபிகள் நாயகம் பெயருடன் (ஸல்) என்று இணைத்து எழுதுவது ஏன் தெரியுமா?

 


நபியவர்களின் பெயரை எழுதும்போது "ஸல்" என்று சேர்த்து எழுதுவது வழக்கம். "ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்" என்பதன் சுருக்கமே 'ஸல்' என்பது. "நாயகம் மீது சாந்தியும், சமாதானமும் உண்டாகுக" என்பது அதன் பொருள்.

தோழர்கள் - 2 - கப்பாப் பின் அல்-அரத் خبّاب بن الأرت (ரலி) வரலாறு -

வாளாயுதம்கப்பாப் பின் அல்-அரத் خبّاب بن الأرت (ரலி)


உமர் (ரலி) நண்பர்களுடன் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது அவர் கலீஃபா. அரியாசனத்தில் மன்னனும் மற்றவர்கள் கீழுள்ள இருக்கையிலும் அமர்ந்திருப்பது போன்ற செட்டப்பெல்லாம் இல்லாமல் அனைவரும் சமமாய் அமர்ந்து உரையாடும் ஏற்றத்தாழ்வற்ற மக்கள் அவர்கள். அப்பொழுது அங்கு வந்தார் கப்பாப்.

Monday, May 07, 2012

குஜராத் கலவரம் தொடர்பாக மோடி விசாரிக்கப்பட வேண்டும்


அகமதாபாத்/புதுடெல்லி: 2002 குஜராத் கலவரத்திற்காக முதலமைச்சர் நரேந்திர மோடி  மீது வழக்கு தொடர முடியும் என்று உச்ச நீதிமன்றத்திடம் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

பாபர் மசூதியை கரசேவகர்கள் இடிக்க அத்வானி உள்ளிட்டோரின் பேச்சுதான் காரணம்- சிபிஐ


பாபர் மசூதியை கரசேவர்கள் இடிக்க பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உள்ளிட்ட தலைவர்களின் ஆவேசப் பேச்சும், தூண்டுதல் பேச்சும்தான் காரணம். எனவே அவர்கள் வழக்கு விசாரணையிலிருந்து விடுபட முடியாது, விசாரணையை அவர்கள் நிச்சயம் சந்தித்தாக வேண்டும் என்று சிபிஐ தெரிவித்துள்ளது
இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அது தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் இப்படித் தெரிவித்துள்ளது சிபிஐ.

Sunday, May 06, 2012

ஜனாஸா தொழுகையில் என்ன ஓதுவது ?


ஜனாஸா தொழுகையில் என்ன ஓதுவது நம்மில் நிறைய பேருக்கு தெரியாமலே இருக்கிறது !!!!!!!


மரணித்தவரின் மறுமை நன்மைக்காக முஸ்லிம்கள் செய்ய வேண்டிய காரியங்களில் ஜனாஸாத் தொழுகை முக்கியமானதாகும்
இறந்தவரின் பாவங்களை மன்னிக்கும்மாறும் மறுமையில் அவருக்கு சொர்க்கத்தை அளிக்கும்மாறும் இறைவனிடம் பிரார்த்தனை செய்வதற்காகவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜனாஸாத் தொழுகையைக் கற்றுத் தந்துள்ளார்கள்.

அறிந்ததும் அறியாததும்! (சிறுவர் பகுதி!) இஸ்லாம் - நபிமொழி

இஸ்லாத்தின் வழிகாட்டிகள் எவை?

 
இஸ்லாத்தின் வழிகாட்டிகள் இரண்டு.

ஒன்று திருக்குர் ஆன். முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு இறைவன் அருளிய திருமறைதான் திருக்குர்ஆன்.

இஸ்லாத்தின் இரண்டாவது வழிகாட்டி, ஹதீஸ். நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், தம்முன் நடந்தவற்றைத் தடுக்காமல் அங்கீகரித்தது அனைத்துமே 'ஹதீஸ்' என்று அழைக்கப்படுகின்றது. இறைவனின் வழிகாட்டுதலின் பெயரிலேயே ஹதீஸ் அமைந்துள்ளதால், திருக்குர்ஆனோடு, ஹதீஸ்களையும் பின்பற்றி நடப்பது முஸ்லிம்களின் கடமையாகும்.

அறிந்ததும் அறியாததும்! (சிறுவர் பகுதி!) l இஸ்லாம் - நபிமொழி

 திருக்குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள நபிமார்கள் யாவர்?


 
ஆதம், இத்ரீஸ், நூஹ், ஹூத், ஸாலிஹ், இபுராஹீம், லூத், இஸ்மாயீல், இஸ்ஹாக், யாஃகூப், யூஸுஃப், அய்யூப், ஷுஐப், மூஸா, ஹாரூண், யூனுஸ், தாவூத், சுலைமான், இல்யாஸ், அல்யஸவு, ஜக்கரியா, யஹ்யா, ஈஸா, முஹம்மத்(ஸல்), துல்கிப்லு ஆகியோர்.


தோழர்கள் - 1 - ஸயீத் இப்னு ஆமிர் سعيد ابن عامر (ரலி) வரலாறு -




உமர் (ரலி) அவர்கள் கலீஃபாவாக ஆட்சி செலுத்திக் கொண்டிருந்த காலகட்டம். சிரியாவின் ஹிம்ஸ் பகுதியிலிருந்து பிரதிநிதிக்குழு ஒன்று மதீனாவிற்கு வந்திருந்தது. அனைவரும் உமர் (ரலி) அவர்களின் நம்பிக்கைக்கு உரியவர்கள். தனது கருவூலத்திலிருந்து உதவி வழங்க, ஹிம்ஸுப் பகுதியில் ஏழையாய் உள்ளவர்களின் பட்டியல் ஒன்றை அளிக்கும்படி அவர்களிடம் கேட்டார் உமர் (ரலி).

Saturday, May 05, 2012

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித்துகளின் நம்பிக்கைக்குரிய அரசியல் கட்சியாக மனிதநேய மக்கள் கட்சியை வளர்த்தெடுக்கும்,தமீமுன் அன்சாரி









சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித்துகளின் நம்பிக்கைக்குரிய அரசியல் கட்சியாக மனிதநேய மக்கள் கட்சியை வளர்த்தெடுக்கும் நோக்கத்தோடு புதிய செயல்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

ஜேர்மனியில் இஸ்லாமியர்களை எதிர்க்கும் யூதர்கள்







 ஜேர்மனியில் தீவிர வலது சாரி சிந்தனையுடன் கூடிய Pro NRW என்ற கட்சி உதயமானது, இக்கட்சியின் முக்கிய நோக்கம் புலம்பெயர்ந்து வந்த முஸ்லிம்களை எதிர்ப்பது தான்.
கட்சி தொடங்கிய உடனேயே முஸ்லிம்கள் மீது அச்சமும், வெறுப்பும் தோன்றும் வகையில், தன் பிரச்சாரத்தைத் தொடங்கியது.

ஒரு வருட ஜெ. ஆட்சி... பாஸா? பெயிலா?



ஓர் ஆண்டு... thanks vikatan.com,
கடந்த சட்டசபைத் தேர்தலில் சுனாமி​யாக எழுந்த மக்களின் எதிர்ப்பு அலை, கருணாநிதியை ஆட்சிக் கட்டிலில் இருந்து அப்புறப்​படுத்தியது. ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன்... அமோகப் பெரும்பான்மையுடன் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தப்பட்டார் ஜெயலலிதா. மே 16-ம் தேதியோடு ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்தைப் பூர்த்தி செய்ய இருக்கிறார், ஜெய​லலிதா. இந்த ஒரு வருடத்தில்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள்.

ஆயுதங்களை வாங்கி குவித்த ஈரான்






பல்வேறு தடைகளையும் மீறி 550 மில்லியன் டொலர்கள் மதிப்பிலான ஆயுதங்களை ஈரான் வாங்கி குவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சுமார் 560 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான ஆயுதங்களை ஈரான் கடந்த 3 ஆண்டு காலப்பகுதியில் இறக்குமதி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.: இந்திய அளவில் 910 மாணவர்கள் தேர்வு






ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட பணியிடங்களுக்கான மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத் (யு.பி.எஸ்.சி.) தேர்வில் 910 மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர். தமிழகத்திலிருந்து 68 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
Blogger Wordpress Gadgets