Facebook Twitter RSS

Friday, March 16, 2012

Widgets

பிரான்ஸ் ஜனாதிபதி சார்கோசி ரூ. 325 கோடி வாங்கினார்?..



கடாபியின் மகன் சைபுல் இஸ்லாம் குற்றச்சாட்டு!
2007 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கோலஸ் சார்கோசி கொல்லப்பட்ட முன்னாள் லிபிய ஜனாதிபதி கடாபியிடம் ரூ. 325 கோடி பணம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
லிபியாவில் கடாபியின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்திற்கு நேட்டோ படையில் இருந்த பிரான்ஸ் உதவி செய்தது. இதையடுத்து கடாபியின் மகன் சைபுல் இஸ்லாம் ஒரு குற்றச்சாட்டை தெரிவித்தார்.
பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கோலஸ் சார்கோசி 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது தனது தந்தையிடமிருந்து ரூ. 325 கோடி பணம் பெற்றதாக தெரிவித்துள்ளார். மேலும் தங்களுக்கு எதிராக நடக்கும் மக்கள் போராட்டத்தை ஆதரிக்கும் சார்கோசி உடனே அப் பணத்தை திருப்பித் தர வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
மேலும் சார்கோசிக்கு தனது தந்தை செய்த பண பரிவர்த்தனை குறித்த விவரங்களை வெளியிடப் போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார். 
இந்நிலையில் கொல்லப்பட்ட முன்னாள் லிபிய ஜனாதிபதி கடாபி, 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தலின்போது நிக்கோலஸ் சார்கோசிக்கு ரூ. 325 கோடி பணம் கொடுத்துள்ளார் என்று பிரான்ஸைச் சேர்ந்த துப்பறியும் இணையதளமான மீடியாபார்டும் குற்றம்சாட்டியுள்ளது. பண பரிவர்த்தனை செய்யப்பட்டதற்கான முக்கிய ஆவணங்களைப் பார்த்ததாக அந்த இணையதளத்தின் நிருபர் பேப்ரிஸ் அர்பி தெரிவித்துள்ளார். 
இரண்டாவது முறையாக ஜனாதிபதிப் பதவிக்கு போட்டியிடும் சார்கோசிக்கு இந்த குற்றச்சாட்டால் பாதிப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது
.

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets